நிருபமா ராவ் இலங்கை விஜயம் ஒரு கண்துடைப்பு நாடகம்: வைகோ

நிருபமா ராவின் இலங்கை பயணம் ஒரு கண்துடைப்பு நாடகம் என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார். போர்க்குற்றவாளியாக ராஜபக்சேவை அறிவிக்கும் முயற்சியில் உலக நாடுகள் ஈடுபட்டிருக்கும்போது அதனைத் தடுக்கும் முயற்சிகளில் ஒன்றாகவே இந்திய வெளியுறவுச் செயலர் நிருபமா ராவின் இலங்கைப் பயணத்தை நோக்க வேண்டியுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

சிறிலங்கா ஜனாதிபதி இலங்கையில் தமிழர்களையே அழித்த கொடுஞ்செயலைச் செய்தவன். அவரை ஒரு போர்க்குற்றவாளியாக அறிவிக்க வேண்டுமென சர்வதேச அமைப்புகள் குரல் கொடுத்துவரும் வேளையில் அவரைக் காப்பாற்றும் முயற்சியையே இந்திய அரசு செய்து வருகிறது.

இந்த நோக்கத்துடனேயே இந்திய வெளியுறவுச் செயலரையம் அங்கு அனுப்பி வைத்துள்ளது. அனைத்துமே கண்துடைப்பு என அவர் சாடியுள்ளார்.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.