புலிகள் என்கிற சந்தேகத்தில் ஜேர்மனியில் தமிழர் மூவருக்கு எதிராக சட்ட நடவடிக்கை!

ஜேர்மனியில் வாழும் புலம்பெயர் தமிழர் மூவருக்கு எதிராக தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்க உறுப்பினர்கள் என்கிற சந்தேகத்தில் அங்கு சட்ட நடவடிக்கை எடுக்கப்படுகின்றது.

வி.எஸ். விஜேகணேந்திரா (வயது 35), எம்.சசிதரன் (வயது 33), ரி.கோணேஸ்வரன் (வயது 39) ஆகியோரே இம்மூவரும் ஆவர். இவர்கள் கடந்த மார்ச் மாதம் கைது செய்யப்பட்டனர்.

ஐரோப்பிய ஒன்றியத்தால் தடை செய்யப்பட்ட அமைப்பான புலிகள் இயக்கத்தில் அங்கம் வகிக்கின்றமை,புலிகள் இயக்கத்துக்கு நிதி மற்றும் பொருட்களை சேகரித்து வழங்கியமை ஆகிய குற்றச்சாட்டுக்கள் இவர்கள் மீது சுமத்தப்பட்டு வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் ஜேர்மனிய அலுவலகத்தை Tamil Coordination Committee (TCC) என்கிற பெயரில் மிக நீண்ட காலமாக நடத்தி, ஜேர்மனில் வாழும் தமிழர்களிடம் இருந்து நிதி, பொருட்கள் ஆகியவற்றை திரட்டி, புலிகளின் தலைமைப் பீடத்துக்கு அனுப்பி வைத்திருக்கின்றனர் என்று இவர்களுக்கு எதிரான குற்றப்பத்திரத்தில் விளக்கமாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.