இராணுவ உத்தியோகத்தர்களின் இடமாற்றம் குறித்த தகவல்களை அனுமதியின்றி ஊடகங்களில் வெளியிடக் கூடாது

இராணுவ உத்தியோகத்தர்கள், உயர் அதிகாரிகளின் இடமாற்றம் மற்றும் பதவி உயர்வு தொடர்பான தகவல்களை அனுமதியின்றி வெளியிடக் கூடாதென ஊடகங்களுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
 
முப்படையைச் சேர்ந்த உத்தியோகத்தர்கள் மற்றும் அதிகாரிகளின் இடமாற்றங்கள் மற்றும் பதவி உயர்வுகள் தொடர்பிலான தகவல்களை வெளியிட வேண்டுமாயின் தேசிய பாதுகாப்பு தொடர்பான ஊடக மத்திய நிலையத்தில் அனுமதி கோரப்பட வேண்டுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.

Media Censoring

அனுமதியின்றி ஊடகங்களில் இவ்வாறான தகவல்கள் வெளியிடப்படக் கூடாதெனத் தெரிவிக்கப்படுகிறது.
 
இராணுவ செய்திகளை வெளியிடுவதன் மூலம் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் ஏற்படக் கூடுமென குறிப்பிடப்படுகிறது.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.