சூரியனின் துணைக்கிரகம்??

`நெமிசிஸ்’ என்று அழைக்கபடுகிற துர்தேவதைகள் பூமியில் இருப்பதாக காலங்காலமாக நம்பபட்டு வருகிறது. ஆனால், வளிமண்டலத்தில் உள்ள பால்வீதியிலும் துர்தேவதைகள் இருப்பதாக சிலர் நம்புகின்றனர். நம்முடைய பிரபஞ்சத்தில் பெரும்பாலான இரட்டை நட்சத்திரங்கள் காணப்படுகின்றன.

அப்படி இருக்கையில் நட்சத்திரங்களுள் ஒன்றான சூரியனுக்கும், இன்னொரு துணை நட்சத்திரம் அருகில் எங்கேயோ இருக்கக் கூடும். ஆனால், அதை பார்க்க முடியவில்லை. ஏனெனில், அது தன்னுடைய சக்தி முழுவதையும் தீர்த்து விட்டு, தற்போது வெள்ளைக் குள்ளனாகவோ அல்லது பழுப்புக் குள்ளனாகவோ மாறியிருக்கலாம். அது வியாழனைபோல 10 மடங்கு நிறை கொண்டதாக இருக்கும் என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள்.

இதைத்தான் சிலர் `துர்தேவதை’ என்று வர்ணிக்கின்றனர். சூரியனானது பால்வீதி பாதையில் 20 கோடி ஆண்டுகளுக்கு ஒருமுறை சுற்றி வரும்போது, சூரியனும், இந்தத் துர்தேவதையும் ஒன்றையொன்று சுற்றி வருவதாக சில விஞ்ஞானிகள் நம்புகின்றனர்.

இந்தத் துர்தேவதை சூரியனுக்கு அருகில் வரும்போது ஒரு ஒளி ஆண்டு தூரத்திலும், தொலைவில் செல்லும்போது 2.4 ஒளி ஆண்டு தூரத்திலும் சுற்றி வருவதாகச் சொல்கிறார்கள். ஆனால், இந்தத் துர்தேவதைகள் இருப்பதற்கான சரியான ஆதாரங்கள் எதுவும் இதுவரை கிடைக்கவில்லை.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.