கனடா வந்த அகதிகளில் 36 பேரிடம் மேலதிக விசாரணை

அண்மையில் எம்.வி. சண் சீ கப்பல் மூலமாக கனடாவை வந்தடைந்த ஈழத் தமிழ் அகதிகளில் 36 பேர் ஏனையவர்களிடமிருந்து தனிமைப்படுத்தப்பட்டு அவர்களிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருவதாக கனடாவின் குடிவரவு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இவர்களுக்கு விடுதலைப் புலிகள் இயக்கத்துடன் தொடர்புகள் இருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்டையிலேயே இந்த விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

இந்த 36 பேர் தொடர்பிலும் கனேடிய காவற்துறையினர், கனேடிய பாதுகாப்பு புலனாய்வுச் சேவை உள்ளிட்டவர்களின் விசாரணைகளும் முன்னெடுக்கப்படும் எனத் தெரிய வருகிறது.

இந்தக் கப்பலின் கப்பரனான வினோத் என்பவரும் தடுத்து வைக்க்பபட்டுள்ள 36 பேரில் அடங்குவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.