வன்னியில் எரியூட்டப்பட்ட நிலையில் விமான உதிரிப்பாகங்கள் கண்டுபிடிப்பு

விடுதலைப் புலிகளால் கடைசி நேரத்தில் கைவிடப்பட்டதாக கருதப்படும் சிறிய ரக விமானத்தின் உதிரிப்பாகங்கள் எரியூட்டப்பட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

இராணுவத்தின் 19 வது ’சிங்க ரெஜிமென்ட்’ இனால் இப் பாகங்கள் வெள்ள முள்ளிவாய்க்கால், அம்பலவன் பொக்கணை போன்ற இடங்களில் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

யுத்தத்தின் இறுதிக் கணங்களில் இவை ஒரு கொள்கலனில் வைத்து பாதுகாக்கப்பட்டிருக்கலாம் என நம்பப்படுகிறது. சிறிலங்கா விமானப் படையின் கணிப்பின்படி இவ் உதிரிப்பாகங்கள் இரு சிறிய ரக விமான இயந்திரங்களின் பாகங்களாக இருக்கலாம் என கூறப்படுகிறது.

இது தொடர்பான மேலதிக பரிசோதனைகளை விமானப்படையினர் மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.