இலங்கையில் இடம்பெற்று வரும் இனஅழிப்பு குறித்து பகிரங்க விவாதமொன்று நடத்தப்பட வேண்டும்: புரூஸ் பெய்ன்

e0aeaae0af81e0aeb0e0af82e0aeb8e0af8d-e0aeaae0af86e0aeafe0af8de0aea9e0af8dஇலங்கையில் தற்போதைய அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட்டு வரும் இனஅழிப்பு நடவடிக்கைகள் தொடர்பில் பகிரங்க விவாதமொன்று நடத்தப்பட வேண்டுமென அமெரிக்காபின் முன்னாள் பிரதி சட்ட மா அதிபர் புரூஸ் பெய்ன் பகிரங்க அழைப்பு விடுத்துள்ளார்.
 
இலங்கை அரசாங்கத்திற்கு சட்ட ஆலோசனை வழங்கி வரும் பெட்டன் பொக்ஸ் எல்.எல்.பி நிறுவனத்துடன் பகிரங்க விவாதமொன்றை நடத்த தயார் என அவர்
குறிப்பிட்டுள்ளார்.

தேசிய ஊடக கழகத்தில் இந்த விவாதத்தை நடத்த முடியும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். அமெரிக்க இன அழிப்பு சட்டத்தின் மூலம் இலங்கை அரசாங்கத்திற்கு எதிராக வழக்குத் தொடர முடியும் எனவும், அதற்கான வலுவான ஆதாரங்கள் தம்மிடம் இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

அமெரிக்க பிரஜைகளான பாதுகாப்பு செயலாளர் கோதபாய ராஜபக்ஷ மற்றும் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா ஆகியோருக்கு எதிராக பாரிய இனஅழிப்பு குற்றச் சாட்டுக்கள் காணப்படுவதாக அவர் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் இடம் பெற்று வரும் இனவழிப்பு நடவடிக்கைகள் குறித்து ஆயிரம் பக்கங்களினால் விசேட அறிக்கையொன்று தயாரிக்கப்பட்டுள்ளதாக புரூஸ் பெய்ன் தெரிவித்துள்ளார்.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.