சண் சீ தமிழ் அகதி கோரிக்கையாளர்களை கனேடிய பா.உ. பீட்டர் ஜுலியன் பார்வையிட்டுள்ளார்

பெர்னபி – பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 492 தமிழ் அகதிக் கோரிக்கையாளர்களை பேர்ணபி -நியூ வெஸ்ட்மினிஸ்டர் பிரதேச புதிய சனநாயகக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினரான பீட்டர் ஜுலியன் பார்வையிட்டார். மனித உரிமைகள் சேவைகள் உதவி மற்றும் மொழிபெயர்ப்பாளர்கள் வழங்கப்படுதல் தொடர்பாக அக்கறை வெளிப்படுத்தியுள்ளார்.

‘மூன்றில் இரண்டு தடுப்பு முகாம்களில் உள்ள அகதிகளைச் சந்திக்கும் சந்தர்ப்பம் எனக்குக் கிடைத்தது. அவர்களுக்கு மொழிபெயர்ப்புச் சேவைகள் போன்ற சேவைகளும் ஆதரவும் போதுமானதாக இல்லை என்பது சந்திப்பின்போது தெளிவாகத் தெரிந்தது.’ என்றார் ஜுலியன்.

 ‘தமிழைப் பூர்வீகமாகக் கொண்ட கனடியர்கள் கனடாவுக்கு பாரிய வகையில் பங்களித்துள்ளனர் என்பதோடு கனடாவில் உள்ள தமிழ் சமூகம் வலுவான உதவிச் சேவைகளை முழுமையாகவும் இலவசமாகவும் இந்த அகதிகளுக்கு வழங்க முன்வந்துள்ளனர். இந்த உதவியை வழங்குவதற்கு அரசாங்கம் ஏன் அனுமதிக்கவில்லை?’ எனக் கேள்வி எழுப்பினார் ஜுலியன்.

இந்த மாதத்தின் தொடக்கத்தில் தமிழ் அகதிகள் இங்கு வந்ததில் இருந்து ஜுலியன் கனடியத் தமிழர் பேரவையின் பிரதிநிதிகளுடனும் குடிவரவு மற்றும் அகதிகள் திணைக்களத்தின் சட்டத்தரணிகளுடனும் சந்திப்பை மேற்கொண்டு வந்துள்ளார். சமூகத்துடனும் சமூக செயற்பாட்டாளர்களுடனும் நகர சபைக் கூட்டம் உட்பட்ட பல சந்திப்புக்களிலும் பங்கெடுத்துள்ளார்.

தடுப்பு முகாமை நான் பார்வையிட்டபோது இந்த அகதிகளுக்கு சமயரீதியான சேவைகளோ மன ரீதியான உதவிகளோ வழங்கப்படவில்லை என நான் அறிந்து கொண்டேன். குற்றமிழைத்த சிறைக்கைதிகளுக்குக் கூட சமய ரீதியான தலைவர்களைச் சந்திக்கும் வாய்ப்பு வழங்கப்படுகிறது – இந்தத் தமிழர்களுக்கு அந்த உரிமை ஏன் வழங்கப்படவில்லை? இது அவர்களின் நடத்தை தொடர்பாக அதிக கரிசனையை ஏனைய கனடியர்களைப் போலவே எனக்கும் ஏற்படுத்துகிறது.

ஸ்கார்பரோ-றுஜ் ரிவர் தொகுதியின் புதிய சனநாயகக் கட்சி வேட்பாளரான ராதிகா சிற்சபைஈசன் தற்போதைய பழமைவாத அரசாங்கம் அகதிகளை குற்றவாளிகள் போல் நடாத்தாமல் அகதிகளாக நடாத்த வேண்டும் என வலுயுறுத்தியுள்ளார்.

‘இந்த தமிழர்களை பரிவுடனும் நீதியுடனும் நடத்த வேண்டிய கடப்பாடு கனடாவுக்கு உள்ளது. என்றார் சிற்சபைஈசன். ‘அவர்களின் மனித உரிமைகளைப் பேணுவதோடு அவர்களுக்கு பாதுகாப்பான மனிதாபிமானமான சூழ்நிலைகளை வழங்க வேண்டும்.

பெண்களும் குழந்தைகளும் தடுப்பு முகாம்களில் தடுத்து வைக்கப்படாமல் அவர்களை கனடியத் தமிழ் சமூகத்துடன் இணைத்து வளமான பாதுகாப்பான சூழலை உருவாக்க வழிவகை செய்ய வேண்டும்.’

மேலதிக விபரங்களுக்கு புதிய சனநாயகக் கட்சியின் ஊடகச் செயலாளர் ருபிண்டர் கர் 613-222-5048 begin_of_the_skype_highlighting              613-222-5048      end_of_the_skype_highlighting அல்லது rupinder@ndp.ca மூலம் தொடர்பு கொள்ளவும்.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.