அடிமைகளாக நடத்தப்பட்ட இலங்கையர்கள் 32 பேர் சைபிரஸில் மீட்பு

அடிமைகளாக நடத்தப்பட்ட இலங்கையர்கள் உட்பட்ட 32 பேர் சைபிரஸ் நாட்டில் மீட்கப்பட்டுள்ளார்கள். இந்த சம்பவம் நேற்று முன்தினம் இடம்பெற்றுள்ளது.

இவர்களை பணிகளுக்கு அமர்த்தியிருந்தவர், கைதுசெய்யப்பட்டதை அடுத்தே இலங்கையர்கள் உட்பட்டவர்கள் இரண்டு இடங்களில் இருந்து மீட்கப்பட்டனர்.

இவர்கள் சைப்பிரஸ் நாட்டில் சட்டவிரோதமாக தங்கியிருந்தவர்கள் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இவர்கள் நீண்ட நேரம் பணிகளில் அமர்த்தப்பட்டிருந்ததாகவும், உரிய இருப்பிடங்கள் இல்லாமல் வீதிகளிலேயே இரவு நேரத்தை கழிப்பதற்கு நிர்ப்பந்திக்கப்பட்டு வந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.