நம் அறிவை மேலும் வளர்த்துக்கொள்ள ஒரு வழி; ஒரு இணையம்

எப்போதும் எதாவது சிந்தனையில் இருக்கும் இருக்கும் நமக்கு நம்
அறிவை தூசு தட்டி மேலும் வளர்த்துக்கொள்ளும் வழிமுறையைப்
பற்றித்தான் இந்தப்பதிவு.

காலத்தின் வேகமான மாற்றம் ஆனாலும் நம் மூளை அப்படியே ஒரே வேலையைத்தான் திரும்ப திரும்ப செய்கிறது. வேலை செய்யவே நேரம் இல்லை இதில் நம் அறிவை வளர்த்துக்கொள்ள் நேரம் எங்கே இருக்கிறது என்றாலும் நாமும் நம் அறிவை வளர்த்துக்கொள்ள நேரம் ஒதுக்கித் தான் ஆக வேண்டும் அந்த வகையில் நம் அறிவை வளப்பதற்கான அத்தனை வழிமுறைகளையும் கொண்டு ஒரு தளம் உள்ளது.

இணையதள முகவரி: http://www.braingle.com

இந்தத்தளத்தில் சென்று நாம் அறிவை வளர்க்கும் கணக்கு முதல் கேள்வி பதில்கள் (குவிஸ்) ,விளையாட்டு போன்றவற்றின் மூலம் நம் அறிவை தூசு தட்டிக்கொள்ளலாம். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பயன்படுத்தும்படியே இந்தத்தளம் இருக்கிறது. மெசஸ் போர்ட் மூலம் நமக்கு தெரியாத கேள்விகளைக் கூட கேட்கலாம் பதிலும் கிடைக்கும். மூளையை சுறு சுறுப்பாக வைத்துக்கொள்ள வேண்டும் என்ற எண்ணம் உள்ள அனைவருக்கும் இந்த இணையதளம் பயனுள்ளதாக இருக்கும்.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.