அம்பாந்தோட்டை துறைமுகத் திறப்புபிற்கு சீன ஜனாதிபதிக்கு அழைப்பு

அம்பாந்தோட்டடை துறைமுகம் எதிர்வரும் நவம்பர் மாதம் 19 ஆம் திகதி திறக்கப்பட்ட உள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளன. 

சீனாவின் முழமையான உதவியுடன் ஆரம்பிக்கப்பட்ட துறைமுக கட்டுமானப் பணிகள் நிறைவடைய உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இந்த நிலையில் அந்தத் துறைமுகத் திறப்பு விழாவிற்கு சீன ஜனாதிபதியை அழைப்பதற்கு ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ விருப்பம் தெரிவித்ததாகவும் பிரதமர் டீ.எம் ஜெயரட்ணவுக்கும் சீனாவின் யூனான் மாநில ஆளுநர் க்வின் குவான்ரோனுக்கும் இடையில் விசும்பாயவில் இடம்பெற்ற  இருத்தரப்பு பேச்சுவார்த்தைகளின் போது இதுபற்ற ஆராயப்பட்டுள்ளதாகவும் தெரியவருகிறது. 

அத்துடன் எதிர்காலத்தில் சீனாவுக்கும் இலங்கைக்கும் இடையில் முக்கிய உடன்படிக்கைகள் சில கைச்சாத்திடப்படவுள்ளதாகவும் தகவல்கள் கிடைத்துள்ளன.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.