ஜனாதிபதியின் மூன்றாம் தவணைக்கு எதிராக ஜே.வி.பி துண்டுப் பிரசுர போராட்டம்

மூன்றாவது தவணையாகவும் ஜனாதிபதியாக ஆட்சி செய்ய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ எடுத்து வரும் முயற்சிகளுக்கு ஜே.வி.பி கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளது.
 
ஜனாதிபதியின் தவணைக்காலத்தை நீடிக்கும் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் நாடு தழுவிய ரீதியில் ஜே.வி.பி துண்டுப் பிரசூர பிரச்சாரமொன்றை ஆரம்பித்துள்ளது.

எதிர்வரும் நாட்களில் நாடு தழுவிய ரீதியில் 2000000 பிரதி துண்டுப் பிரசூரங்கள் விநியோகம் செய்யப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
 
அரசியல் சாசனத் திருத்தங்களுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையிலான துண்டுப் பிரசூர போராட்டம் இன்றைய தினம் ஆரம்பிக்கப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
 
அரசியல் சானத் திருத்தங்களுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் ஜே.வி.பி பல்வேறு பிரச்சாரங்களை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
 
பொதுக் கருத்தரங்குகள், துண்டுப் பிரசூர போராட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு வழிகளில் போராட்டங்கள் நடத்தப்பட உள்ளதாக ஜே.வி.பி அறிவித்துள்ளது.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.