நிரூபமா ராவ் – தமிழ் கட்சிகளின் அரங்கப் பிரதிநிதிகள் இன்று சந்திப்பு

இந்திய வெளியுறவுச் செயலாளர் நிரூபமா ராவ் இலங்கை தமிழ்க் கட்சிகளின் அரங்கப் பிரதிநிதிகளை இன்று காலை சந்தித்து கலந்துரையாடினார். எஸ்.ஜே.வி. சந்திரஹாசன் தலைமையில் நடைபெற்ற இந்தச் சந்திப்பில் ஈ.பி.டி.பி சார்பாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, ராஜ்குமார், ஜனநாயக மக்கள் முன்னணி சார்பாக நல்லையா குருபரன், த.தே.கூ.வி.மு. சார்பாக எம்.கே.சிவாஜிலிங்கம், புளோட் அமைப்பு சார்பாக சதானந்தன், ஈ.பி.ஆர்.எல்.எப் சார்பாக ஸ்ரீதரன்,டெலோ அமைப்பு சார்பாக உதயராஜ், சுரேந்திரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இதன் போது, போக்குவரத்து தொலைத்தொடர்பு வசதிகளை புனரமைத்தல், உயர்பாதுகாப்பு வலயங்களைப் படிப்படியாக அகற்றுதல், தமிழ் பிரதேசங்களில் பாதுகாப்பு படையினரை குடியமர்த்துவதை தடுத்தல், சிவில் நிர்வாகத்தை முழுமையாக அமுல்படுத்தல், உடைமைகளை இழந்தோர் மற்றும் அங்கவீனர்களுக்கு நஷ்ட ஈடு வழங்குதல், வடக்கு கிழக்கு புதிய வரைபடங்கள் உருவாக்கும் முயற்சியை முற்றாக நிறுத்துதல், யுத்த காலத்தில் மேற்கொள்ளப்பட்ட பாதுகாப்பு நடைமுறைகளை நீக்குதல், 13 ஆவது திருத்தச்சட்டத்தை முழுமையாக அமுல்படுத்தல், அரசியல் கைதிகளை விடுதலை செய்தல் போன்ற கோரிகைகள் முன்வைக்கப்பட்டன.

இவை தொடர்பாகத் தாம் பரிசீலனை செய்வதாக நிரூபமா ராவ் இதன்போது தெரிவித்தார்.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.