இந்துக் கடவுள்களிடம் சரணடையும் பொன்சேகாவின் புதல்விகள்

தடுத்து வைக்கப்பட்டுள்ள தமது தந்தையின் விடுதலை வேண்டி அமெரிக்காவிலுள்ள பொன்சேகாவின் புதல்விகள் இந்து ஆலயத்தில் தேங்காய் உடைத்து வழிபாடுகளில் கலந்து கொண்டனர்.

தமது தந்தையின் விடுதலைக்காகவும் இலங்கையில் ஜனநாயகத்தை ஏற்படுத்துவதற்காகவுமே இந்த வழிபாடு இடம்பெற்றுள்ளது.

கலிபோர்னியாவில் கடந்த சனிக்கிழமை நடைபெற்ற இந்த வழிபாட்டில் பெருமளவான மக்கள் கலந்து கொண்டனர்.

கொழும்பு முகத்துவாரம் காளி கோயிலில் பொன்சேகாவின் பாரியார் அனோமா பொன்சேகாவும் இது போன்ற வழிபாடுகளில் கலந்து கொண்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.