சிங்கள பூமியாக மாறி வரும் மாதகல் பிரதேசம்!

யாழ்ப்பாணம் – மாதகல் பிரதேசத்தில் அமைந்துள்ள சம்பில் துறைக்கு பெருமளவான தென்பகுதி மக்கள் வருகை தந்த வண்ணம் உள்ளார்கள்.

இந்தியாவில் இருந்து வந்த சங்கமித்தை இப்பகுதியில்தான் வந்து இறங்கினார் என்று அவர்கள் கூறுகின்றனர். இம்மக்களின் வருகையோடு இங்கு பெரியதூபி ஒன்றும் புத்தர் சிலை ஒன்றும் நிறுவப்பட்டுள்ளன.

சம்பில் துறைக்கு சென்ற வருடம் ஜனாதிபதி மகிந்தராஐபக்ஸவின் பாரியாரும், அப்போது பிரதமராக இருந்த பிரதமர் ரட்ணஸ்ரீவிக்கரமநாயக்கவின் பாரியாரும் வருகை தந்திருந்தனர். இதனை அடுத்து இப்பகுதியை அதியுயர் இராணுவ பாதுகாப்பு வலயமாக படையினர் அறிவித்து விட்டனர்.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.