அமெரிக்காவில் அதிசயம் 40-வது மாடியில் இருந்து விழுந்தவர் உயிர் பிழைத்தார்!!

அமெரிக்காவில் உள்ள நியூயார்க் நகரில் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்தவர் தாமஸ் மகில் (வயது 40). சில பிரச்சினைகளால் மனவேதனையில் இருந்த அவர் தற்கொலை செய்ய முடிவு எடுத்தார்.

இதற்காக தனது குடியிருப்பில் 40-வது மாடி உச்சிக்கு சென்று அங்கிருந்து கீழே குதித்தார். ஆனாலும் அவர் அதிசயமாக உயிர் பிழைத்து விட்டார்.

கட்டிடத்துக்கு கீழே ஏராளமான கார்கள் நிறுத்தப்பட்டு இருந்தன. அதில் ஒரு கார் மேற்கூரை இல்லாமல் திறந்த அமைப்பில் இருந்தது. அந்த காரின் பின் இருக்கையில் அவர் விழுந்தார். இதனால் அவர் காயத்துடன் தப்பி விட்டார்.

ஆனாலும் அவருடைய கால் எலும்பு உடைந்து விட்டது. இதற்காக ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.