புலிகள் இயக்கத்துக்கு நிதி உதவி செய்தாரென குற்றஞ்சாட்டி தொழிலதிபர் இராஜரட்ணம் மீது அமெரிக்காவில் வழக்கு!

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்துக்கு மில்லியன் கணக்கான டொலரை உதவியாக வழங்கினார் என்று குற்றஞ்சாட்டி அமெரிக்காவின் பிரபல தொழில் அதிபர்களில் ஒருவரும், கோடீஸ்வர வர்த்தகருமான புலம்பெயர் தமிழர் இராஜ் இராஜரட்ணத்துக்கு எதிராக அந்நாட்டு நீதிமன்றம் ஒன்றில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இவரது தந்தை ஜேசுதாஸன் இராஜரட்ணமும் இவ்வழக்கின் எதிரிகளில் ஒருவராகப் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளார். தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தால் பாதிக்கப்பட்டவர்கள் என்று தெரிவித்து 24 தமிழர்கள் இவ்வழக்கைத் தாக்கல் செய்துள்ளார்கள்.

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் அமைப்புக்களில் ஒன்றான தமிழர் புனர்வாழ்வுக் கழகத்துக்கு இராஜ் இராஜரட்ணம் இப்பெருந்தொகையை நிதியை வழங்கி இருக்கின்றார் என்றும் குறிப்பாக சுனாமி நிவாரண நிதியம் என்கிற பெயரில் புலிகளுக்கு 02 மில்லியன் அமெரிக்க டொலரை வழங்கி உள்ளார் என்றும் இவரும், இவரது குடும்பத்தினரும் புலிகள் அமைப்புக்கு ஆதரவாக பிரசாரங்களை முன்னெடுத்து வந்துள்ளார்கள் என்றும் வழக்காளிகள் மன்றுக்கு தெரிவித்துள்ளார்கள். இவ்வழக்கைத் தொடர்ந்து விசாரிக்க நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.