அரசுக்கு ஆதரவாக வாக்களிக்க ஐ.தே.கட்சியின் இன்னொரு உறுப்பினரும் தயார்!

ஐக்கிய தேசியக் கட்சியின் பொலநறுவை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஏர்ல் குணசேகர அரசியலமைப்பு திருத்தங்கள் மீதான வாக்கெடுப்பின்போது அரசுடன் சேர்ந்து வாக்களிக்க முடிவெடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இத் தீர்மானம் குறித்து தான் ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழுவிற்கு ஏற்கனவே அறிவித்துள்ளதாகவும் கட்சியினால் மேற்கொள்ளப்படும் எந்த நடவடிக்கைக்கும் முகம் கொடுப்பதற்கு தான் தயார் எனவும் அவர் கொழும்பு இணையத்தளமொன்றிற்குத் தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே ஐக்கிய தேசியக் கட்சியின் கண்டி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரான அப்துல் காதர் வரவு செலவுத் திட்டம் மீதான வாக்கெடுப்பின்போது அரசுக்கு ஆதரவாக வாக்களித்திருந்தார். அரசியலமைப்புத் திருத்தங்கள் தொடர்பான வாக்கெடுப்பிலும் இவர் அரசுக்கு ஆதரவாக வாக்களிப்பார் என்றே நம்பப்படுகிறது.

அரசுக்கு ஆதரவாக வாக்களிக்காது போனால் ஐக்கிய தேசியக் கட்சி மேலும் பலவீனமடைந்துவிடும் என கடந்த வாரம் இவர் கருத்து வெளியிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.