மக்களின் மீள்குடியேற்றம் மற்றும் பிரச்சினைகள் குறித்து கலந்துரையாடினோம்: செல்வராஜா

வடக்குக்கிழக்கில் இடம்பெயர்ந்துள்ள மக்களின் மீளகுடியேற்றம் மற்றும் அவர்களுடைய பிரச்சினைகள் குறித்து இந்திய வெளியுறவுச் செயலாளர் நிருபமா ராவுடன் தாம் பேச்சு நடத்தியதாகவும் அதுகுறித்து அவர் கவனம் செலுத்துவதாக தெரிவித்ததாகவும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பொன். செல்வராஜா தெரிவித்துள்ளளார்.

இன்றைய முக்கிய தேவையாக இருக்கின்ற இடம்பெயர்ந்த மக்களின் மீள்குடியேற்றம், வீட்டுப்பிரச்சினைகள், வேலைவாய்ப்பு சம்பந்தமமான பிரச்சினைகள் குறித்தும் ஆராயப்பட்டது. அதே வேளை இந்தியா வழங்கவுள்ள 50ஆயிரம் வீடுகள் பற்றியும் ஆராயப்பட்டது.

முக்கியமாக திருமலை மாவட்டத்தின் மூதூர், சம்பூர் மக்களின் மீள்குடியேற்றம் தொடர்பில் பேசுகையில், அவர்களுடைய சொந்த இடங்களுக்கு அண்மையிலேயே குடியேற்றங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும் என கேட்டுக் கொண்டோம்.

மட்டக்களப்பு மாவட்டம் குறித்துப் பேசுகையில் இடம்பெயர்ந்த மக்களுக்குரிய மீள் குடியேற்ற நடடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளபோதும். இன்னமும் வீடுகள் அற்ற மக்கள் உள்ளனர். எனவே இதன் அடிப்படையில் மாவட்ட அரசாங்க அதிபர் 5047 மில்லியன் நிதி தேவையென தெரிவித்துள்ளமை குறித்தும் பேசப்பட்டது என அவர் மேலும் தெரிவித்தார்.

நேற்று மாலை நடைபெற்ற சந்திப்பில் மாவை சேனாதிராஜா, சுரேஸ் பிரேமச்சந்திரன், சுமந்திரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.