இரணைமடு குளத்தில் மீன்பிடி – சிறிலங்கா படையினர் தொடர்ந்தும் அனுமதி மறுப்பு

இரணைமடுக் குளத்தில் மீன்பிடிக்க பாதுகாப்பு அதிகாரிகள் அனுமதி வழங்க மறுத்து வருவதாக சிறிலங்காவின் கடற்றொழில் நீரியல் வளங்கள் அமைச்சு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள இரணைமடுக் குளத்தில் மீன்பிடி நடவடிக்கைகள் பல ஆண்டுகளாக தடைப்பட்டுள்ளன. இங்கு மீளவும் மீன்பிடி நடவடிக்கைகளை ஆரம்பிப்பதற்கு முயற்சிகள் எடுக்கப்படுகின்றன.

நாட்டின் மிகப் பெரிய நீர்த்தேக்க்ங்களில் ஒன்றான இரணைமடுவில் மீன்பிடிப்பதற்கு பாதுகாப்பு அதிகாரிகளின் அனுமதி இன்னமும் கிடைக்கவில்லை.

அவர்களின் அனுமதி கிடைத்ததும் அங்கு மீன்பிடிக்க முடியும்.

இரணைமடுக் குளத்தில் பாரம்பரிய முறைப்படி காலம் காலமாக மீன்பிடி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வந்தன.

கடந்த வருடம் ஜனவரி மாதம் இந்தக் குளத்தை 57வது டிவிசன் படைப்பிரிவு தமது கட்டுப்பாட்டில் கொண்டு வந்தது.

சுமார் 50 சதுர கி.மீ பரப்பளவுடைய இந்தக் குளத்தின் தென்மேற்குப் புறத்தில் 300 மீற்றர் நீளமும் 20 மீற்றர் அகலமும் கொண்ட விமான ஓடுபாதை ஒன்றை புலிகள் அமைத்திருந்தனர். இது குளக்கட்டுக்கு அருகே சமாந்தரமானதாக அமைக்கப்பட்டுள்ளது.

இங்கு மீன்பிடி நடவடிக்கைகளை ஆரம்பிக்கக விரைவில் நடவடிக்க எடுக்கபடும் என்று கடற்றொழில் நிரியல் வளங்கள் இமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்திருந்தார்.

சில வாரங்களுக்கு முன்னர் அவர் கிளநொச்சி சென்றிருந்த போது மீனவர்கள் இது தொடர்பான கோரிக்கையை அவரிடம் முன்வைத்திருந்தனர்.

இரணைமடுக் குளத்தில் மீன்பிடிப்பதற்கு அனுமதி பெற்றுக் கொடுப்பது தொடர்பாக அமைச்சர் ராஜித சேனாரத்ன பாதுகாப்பு அதிகாரிகளுடன் கலந்துரையாடி வருகிறார்.

ஆனால் இன்னமும் இது தொடர்பான இறுதி முடிவு எதுவும் எடுக்கப்படவில்லை. பாதுகாப்பு அதிகாரிகள் சாதகமான பதிலை வழங்கவில்லை.

எனினும் விரைவில அதற்கு அனுமதி கிடைக்கும் என்று நம்புவதாகவும் கடற்றொழில் நீரியல் வளங்கள் அமைச்சு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.