வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸிற்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம்

வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸிற்கு எதிராக ஐக்கிய தேசியக் கட்சி நம்பிக்கை இல்லா தீர்மானமொன்றை நிறைவேற்றத் தீர்மானித்துள்ளது.
 
குறித்த நம்பிக்கை இல்லாப் பிரேரணை குறித்த யோசனைத் திட்டம் சபாநாயகர் சமல் ராஜபக்ஷவிடம் ஏற்கனவே ஒப்படைக்கப்பட்டுள்ளது.

வெளிவிவகார அமைச்சர் சர்வதேச விவகாரங்களை உரிய முறையில் கையாழத் தவறியுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
 
நம்பிக்கையில்லாத் தீர்மானத்தில் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க கையொப்பிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
 
ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் கரு ஜயசூரிய, பாராளுமன்ற உறுப்பினர்களான ரவி கருணாநாயக்க, லக்ஸ்மன் கிரியயெல்ல, ஜோன் அமரதுங்க மற்றும் விஜயதாஸ ராஜபக்ஷ ஆகியோர் இந்தப் பிரேரணையில் கைச்சாத்திட்டுள்ளனர்.
 
ஐக்கிய தேசியக் கட்சியின் தீர்மானத்திற்கு அமைய இந்த நம்பிக்கை இல்லாத் தீர்மானம் நிறைவேற்றப்படுவதாக ரவி கருணாநாயக்க இதனைத் தெரிவித்துள்ளார்.
 
இதனால் ஏனைய கட்சிகளிடம் இதற்காக ஆதரவு கோரப்படவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
 
அமைச்சர் ஜீ.எல்.பீரிஸிற்கு எதிராக பல்வேறு குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
 
சவூதி அரேபியாவில் சித்திரவதைக்கு உட்படுத்தப்பட்ட பெண் தொடர்பான விடயங்களிலும் அமைச்சர் உரிய நடவடிக்கை எடுக்கத் தவறியுள்ளதாக அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.