புகலிடம் நிராகரிக்கப்பட்டு திருப்பி அனுப்பப்படும் இலங்கையருக்கு பேராபத்து! மன்னிப்புச் சபை அறிக்கை

அகதி அந்தஸ்து நிராகரிக்கப்பட்டு நாட்டுக்கு திருப்பி அனுப்பப்படும் இலங்கையர்கள் அங்கு அரசுத் தரப்பினரால் சித்திரவதை செய்யப்படுகின்றார்கள் என்று சர்வதேச மன்னிப்புச் சபை வெளிப்படுத்தி உள்ளது.

ஆஸ்திரேலியாவில் இருந்து பலாத்காரமாக கடந்த வருடம் இவ்வாறு அனுப்பி வைக்கப்பட்டிருந்த மூவர் சிறையில் அடைக்கப்பட்டு இருக்கின்றார்கள் என்றும் சித்திரவதை செய்யப்பட்டு இருக்கின்றார்கள் என்றும் சபை இன்று வெளியிட்ட அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளது.

சுமித் மெண்டிஸ், லசந்த விஜேரட்ண, இந்திக்கா ஆகிய மூவருமே சிறைச்சாலைக் காவலர்களாலும், ஏனைய சிறைக் கை திகளாலும் அடிக்கப்பட்டும், தாக்கப்பட்டும், சித்திரவதை செய்யப்பட்டும் இருக்கின்றார்கள் என்றும் இவர்களின் உயிருக்கு உத்தரவாதம் இல்லையென்றும் சபை குறிப்பிட்டுள்ளது.

இவர்களுக்கு நேர்ந்திருக்கும் கொடுமைகளுக்கு ஆஸ்திரேலியாவும், இலங்கையுமே பொறுப்பாளிகள் என்றும் அது சுட்டிக் காட்டி உள்ளது. அகதி அந்தஸ்து நிராகரிக்கப்பட்டு நாட்டுக்குத் திருப்பி அனுப்பப்படும் இலங்கையர்களின் உயிரைப் பாதுகாக்க வேண்டியது இலங்கை அரசின் கடமை என்றும் வலியுறுத்தி உள்ளது.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.