ஐரோப்பிய ஒன்றியம் நோக்கிய புலம்பெயர் தமிழரின் நடைப் பயணம் ஏழாவது நாளாக தொடர்கின்றது!

சுவிற்சலாந்தின் ஜெனிவாவில் அமைந்திருக்கும் ஐ.நா முன்றலில் இருந்து பெல்ஜியத்தின் தலைநகர் புருசல்ஸில் உள்ள ஐரோப்பிய ஒன்றியத்தை நோக்கிய புலம்பெயர் தமிழர்கள் மூவரின் பயணம் இன்று ஏழாவது நாளாகத் தொடர்கின்றது.

இந்நடைப் பயணிகளில் ஒருவர் வயோதிபர். வயது 62. பெயர் ஜெகன்.ஆஸ்திரேலியாவைச் சேர்ந்தவர். இன்னொருவர் திருமணமான பெண். வயது 36. பெயர் தேவகி குமார். சுவிற்சலாந்தைச் சேர்ந்தவர் . முன்றாமவருக்கு வயது 46. பெயர் விநோத். பிரான்ஸைச் சேர்ந்தவர்.

மோசமான காலநிலை மாற்றத்தாலும், சீரற்ற வீதிகளாலும் பெருஞ்சிரமங்களை எதிர்கொண்டவாறே இவர்களின் பயணம் தொடர்கின்றது. இவர்களின் காலில் வீக்கங்கள் ஏற்பட்டிருக்கின்றன. இதனால் நடக்கின்றமையில் சிரமம் உள்ளது.

இன்று இவர்களின் நடைபயணம் Solothurn என்ற இடத்தில் இருந்து ஆரம்பித்து Attiswil ஊடாக Balsthal நோக்கி தொடர்கிறது. இவர்களுடன் சேர்ந்து நடக்க விரும்புவர்கள் இந்த இடங்களில் வந்து இணைந்து கொள்ள முடியும்.

புலம்பெயர் நாடுகளில் உள்ள தமிழர்கள் இவர்களுக்கு பல வழிகளிலும் பேராதரவை வெளிப்படுத்தி வருகின்றனர் எனப் புலம்பெயர் தமிழர் அமைப்புக்கள் தெரிவிக்கின்றன.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.