பிரித்தானியா ஹரி கிருஷ்ணா ஆலயத்தில் வாயு சிலிண்டர் வெடித்ததால் தீ – சிலர் காயம்

பிரித்தானியாவின் லெஸ்செஸ்ரர் பகுதியில் உள்ள ஹரி கிருஷ்ணா ஆலயத்தில் இன்று (3) வெள்ளிக்கிழமை நடைபெற்ற உற்சவத்தின்போது சமயல் வாயு சிலிண்டர் வெடித்ததால் ஆலயத்தின் ஒரு பகுதி தீப்பற்றிக் கொண்டது.

எனினும் உடனடியான சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு படையினர் நிலமையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஆலயத்தினுள் பரவிய தீயில் பலர் சிக்குண்டுள்ளதாக முன்னர் தெரிவிக்கப்பட்டபோதும், அவ்வாறு எவரும் சிக்கவில்லை என பிரித்தானியா காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவத்தில் சிலர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதனிடையே, ஆலயத்தில் குண்டு வெடித்துள்ளதாக பரவிய வதந்தியால் பிரித்தானியாவில் உள்ள இந்துக்கள் பதற்றத்துக்கு உள்ளாகியது இங்கு குறிப்பிடத்தக்கது.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.