பிரித்தானிய முன்னாள் வெளிநாட்டமைச்சர் இன்று தமிழ் மக்களை சந்திக்கின்றார்! பெருமளவில் திரண்டுவருமாறு அழைப்பு!!

உங்கள் உறவினர்கள் பிரித்தானியாவில் வசிக்கின்றார்களா, உடனே அவர்களுக்கு இதை தெரியப்படுத்தி அவர்களையும் இதில் கலந்து கொள்ளுமாறு அறிவுறுத்துங்கள்.

பிரித்தானிய வாழ் தமிழ் மக்களை பிரித்தானிய முன்னாள் வெளிநாட்டமைச்சரும் தொழில் கட்சியின் முதன்மை வேட்பாளருமான டேவிட் மிலிபாண்ட் இன்று சனிக்கிழமை சந்திக்கின்றார். இவர் முன்னர் உலகத்தமிழர் பேரவையின் அங்குரார்ப்பண நிகழ்விலும் கலந்துகொண்டிருந்தார். இதனால் சிறிலங்கா அரசு கடும் சீற்றமடைந்திருந்தது.

இந்நிலையில் எதிர்வரும் தேர்தலில் முதன்மை வேட்பாளராக போட்டியிடவுள்ள டேவிட் மிலிபாண்ட் உடனான சந்திப்பு தமிழர்களை பொறுத்தவரை முக்கியமானதாகும் நிகழ்வு ஏற்பாட்டாளர்கள் தெரிவிக்கின்றார்கள்.

பெருமளவான மக்களை திரண்டுவந்து தமிழ் மக்களின் கரிசனையை வெளிப்படுத்துமாறும் அதன் மூலம் தாயகத்தில் வாழும் மக்களின் உரிமைக்கான குரலை வெளிப்படுத்துமாறும் ஏற்பாட்டாளர்கள் மேலும் கேட்டுள்ளார்கள்.

மாலை ஆறு மணிமுதல் ஒன்பது மணி வரை நடைபெறவுள்ள நிகழ்வுக்கு அரை மணித்தியாலத்திற்கு முன்னரே வந்தடையுமாறும் நிகழ்வு ஏற்பாட்டாளர்கள் விடுத்துள்ள அறிக்கை தெரிவிக்கின்றது.

சந்திப்பு நடைபெறும் இடம்:
Central Hall Westminister, Storey’s Gate, London, SW1H 9NH

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.