புலிகளின் தலைவர் படத்தை விற்றமை குற்றமா? கைதானவர் சென்னை மேல்நீதிமன்றில் வழக்கு

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் வே.பிரபாகரனின் புகைப்படத்தை விற்பனை செய்தார் என்கிற குற்றச்சாட்டின்பேரில் கைது செய்யப்பட்டமையை ஆட்சேபித்து சுப்பிரமணியம் என்பவர் சென்னை மேல்நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்துள்ளார்.

கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பெரியார் திராவிடக் கழக கூட்டம் நடந்தது. இக் கூட் டத்தில் பல்லடத்தைச் சேர்ந்த சுப்பிரமணியம் என்பவர் புத்தகங்களையும்,படங்களையும் விற்றார்.

அதில் விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனின் படமும் இருந்தது. இதை அடுத்து பொலிஸார் இவரைக் கைது செய்தனர்.சட்டவிரோத தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்தனர். ஆயினும் இவர் பிணையில் வெளியில் வந்து விட்டார்.

பொலிஸாரால் தாக்க்ல் செய்யப்பட்டிருக்கும் அவ்வழக்கை நிராகரிக்க வேண்டும் என்று கோரி சென்னை மேல் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளார். அதில் பிரபாகரனின் படத்தை விற்றமையால் அவர் ஒரு தீவிரவாதி அல்லர் என்றும் எந்த குற்ற எண்ணத்துடனும் செயற்பட்டிருக்கவில்லை.

அவர் மீதான வழக்கு தவறானது என்றும் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பாக தமிழ்நாடு அரசு இரு வாரங்களுக்கு இடையில் பதில் அளிக்க வேண்டும் என்று நீதிமன்றம் உத்த்ரவிட்டுள்ளது.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.