இடைத்தங்கல் முகாமில் உள்ள சாந்தபுரம் கிராம மக்களுக்கு நல்லை ஆதீன குருமுதல்வர் மக்கள் கண்ணீர் மல்க ஆசீர்வாதம்

மீள்குடியேற்றத்திற்கென அழைத்து வரப்பட்டு இடைத்தங்கல் முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ள சாந்தபுரம் கிராம மக்களை நல்லை ஆதீன குருமுதல்வர் சோமசுந்தர பரமாச்சாரிய சுவாமிகள் சென்று பார்வையிட்டுள்ளதுடன் ஆசிர்வாதங்களையும் வழங்கியுள்ளார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரனின் அழைப்பின் பேரில் கடந்த வியாழனன்று குறித்த இடைத்தங்கல் முகாமிற்கு குருமுதல்வர் சென்றிருந்தார்.

இதன்போது மக்கள் கண்ணீர் மல்க தமது இடங்களில் தம்மை மீள் குடியேற்றம் செய்ய ஆவணசெய்யுமாறு கேட்டுக் கொண்டனர். மேலும் தமது நிலை தொடர்பாக வெளியுலகிற்குத் தெரியப்படுத்துமாறும் கேட்டுக் கொண்டனர்.

இங்கு உரையாற்றிய குருமுதல்வர் எல்லாம் நல்லவையாக அமையும் மனிதர்கள் செய்கின்ற செயல்கள் எல்லாவற்றிற்குமே ஓரு பிரதியீடு உண்டு ஆகவே எல்லோரும் பொறுமையாக இருக்கும் படி கேட்டுக் கொண்டனர்.

இதன் போது பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரனும் உடனிருந்தார்.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.