சன் சீ கப்பலில் சென்ற பெண்களையும் சிறுவர்களையும் விடுவிக்கக் கோரி கனடாவில் ஆர்ப்பாட்டம்

சன் சீ கப்பல் மூலம் கனடாவை சென்றடைந்த இலங்கைத் தமிழர்களை விடுதலை செய்யக்கோரி இன்று ஆர்ப்பாட்டம் ஒன்று கனடாவில் நடத்தப்படவுள்ளது.  தமிழர் சார்பு அமைப்பு ஒன்று இந்த ஆர்ப்பாட்டத்தை இன்று பிற்பகல் முன்னெடுக்கவுள்ளது.

பேனாபே இளைஞர் தடுப்பு சேவை நிலையத்தின் முன்னால் இந்த ஆர்ப்பாட்டத்தை நடத்த ஒழுங்குகள் செய்யப்பட்டுள்ளதாக கனேடிய செய்திகள் தெரிவிக்கின்றன.

இந்த நிலையத்தில் பெண்களும் சிறுவர்களுமே அதிகளவில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

இவர்கள் இவ்வாறு தடுத்து வைக்கப்பட்டுள்ளமையானது நீதிக்கு புறம்பான செயல் என ஆர்ப்பாட்டத்தை நடத்தப்போகும் குழு குறிப்பிட்டுள்ளது.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.