அரசமைப்பு திருத்த யோசனைக்கு எதிராக இத்தாலியில் சிங்களவர்கள் ஆர்ப்பாட்டம்!

அரசமைப்புத் திருத்த யோசனையை எதிர்த்து இத்தாலியில் வாழும் சிங்களவர்கள் மாபெரும் ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்த உள்ளார்கள். இத்தாலிக்கான இலங்கைத் தூதரகம் முன்பாக எதிர்வரும் 05 ஆம் திகதி காலை 10.00 மணியில் இருந்து மதியம் 1.00 மணி வரை இவ்வார்ப்பாட்டம் இடம்பெற உள்ளது.

இத்தாலியைத் தளமாகக் கொண்டு செயற்படும் Movement for Democracy in Sri Lanka என்கிற சிங்கள அமைப்பு இவ்வார்ப்பாட்டத்தை ஒழுங்கு செய்துள்ளது. இவ்வார்ப்பாட்டத்தில் அங்குள்ள இலங்கையர்கள் பெருந்திரளாகக் கலந்துகொள்ள வேண்டும் என்று இவ்வமைப்பு அழைப்பு விடுத்து விடுத்து வருகின்றது.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.