விடுதலைப் புலி உறுப்பினர்களை வெளிநாடுகளுக்கு அனுப்பினர் – 26 பேர் சிறிலங்காவில் கைது

பாரியளவிலான ஆட்கடத்தலை மேற்கொண்டனர் என்ற குற்றச்சாட்டின் பேரில் 26 பேர் சிறிலங்கா குற்றப்புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த குழுவினர் தமிழீழ விடுதலைப் புலி உறுப்பினர்கள் உட்பட ஏராளமானோரை சிறிலங்காவிலிருந்து அவுஸ்ரேலியா உள்ளிட்ட வெளிநாடுகளுக்கு சட்டவிரோதமா படகுகள் மூலம் கொண்டு சென்று சேர்த்துள்ளனர் என்று சிறிலங்கா காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இந்த ஆட்கடத்தல் கும்பல் சிறிலங்காவின் மாத்தற பகுதியிலிருந்து 104 பேரை படகுமூலம் அவுஸ்ரேலியாவுக்கு ஏற்றி செல்ல முற்பட்ட போதே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக சிறிலங்கா காவல்துறையினர் மேலும் தெரிவித்துள்ளனர்.

இந்த ஆட்கடத்தல் கும்பல் போலியாக வெளிநாடுகளில் அடைக்கலம் கோருவோருக்கும் தமிழீழ விடுதலைப் புலி உறுப்பினர்கள் சட்டவிரோதமாக வெளிநாடுகளுக்கு சென்று சேருவதற்கும் உதவியிருப்பதாக விசாரணைகள் மூலம் தெரிய வந்துள்ளது என்று சிறிலங்கா காவல்துறையினர் கூறியுள்ளனர்.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.