எம்.வி.சன்.சி தமிழரில் அநேகருக்கு அரசியல் தஞ்சம் கிடைக்கலாம்!

எம்.வி.சன்.சி கப்பல் மூலம் கனடாவை வந்தடைந்து இருக்கும் இலங்கைத் தமிழர்கள் 492 பேரில் பெரும்பாலானோருக்கு அரசியல் தஞ்சம் கிடைக்கின்றமைக்கு நிறையவே சந்தர்ப்பங்கள் உள்ளன என்று கனடாவில் இருந்து வெளியாகும் பத்திரிகைகள் ஊகங்கள் வெளியிட்டுள்ளன.

இத்தமிழர்களால் சமர்ப்பிக்கப்பட்டிருக்கும் அகதி அந்தஸ்து கோரும் விண்ணப்பங்களை மிகவும் சாதகமான முறையிலேயே கனேடிய அதிகாரிகள் பரிசீலித்து வருகின்றனர் என்று அச்செய்திகள் தெரிவிக்கின்றன.

ஏனைய நாடுகளுடன் ஒப்பிடும்போது இலங்கையர்களுக்கு கனடாவில் அரசியல் தஞ்சம் கிடைக்கின்றமைக்கான சந்தர்ப்பங்களும், வாய்ப்புக்களும் ஏராளம் என்றும் அச்செய்தியில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

கனடாவில் கடந்த காலங்களில் அகதி அந்தஸ்து கிடைக்கப் பெற்றிருக்கும் இலங்கையர்களில் கணிசமான தொகையினர் தமிழர்கள் என்றும் அவற்றில் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.