இலங்கையில் 3 புகலிடக் கோரிக்கையாளர்கள்; சித்திரவதைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர் – சர்வதேச மன்னிப்புச் சபை

மூன்று புகலிடக் கோரிக்கையாளர்கள் இலங்கையில்  சித்திரவதைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக சர்வதேச மன்னிப்புச் சபை குற்றம் சுமத்தியுள்ளது.
 
புகலிடக் கோரிக்கை மறுக்கப்பட்டு அவுஸ்திரேலியாவிலிருந்து மீண்டும் நாடு கடத்தப்பட்ட மூன்று இலங்கையர்களே இவ்வாறு சித்திரவதைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

சுமித் மெண்டிஸ் மற்றும் லசந்த விஜேரட்ன ஆகிய இரண்டு புகலிடக் கோரிக்கையாளர்கள் தாக்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.
 
நாடு கடத்தப்பட்ட மூன்றாவது நபரின் நிலைமை தெளிவாகவில்லை என சர்வதேச மன்னிப்புச் சபை குறிப்பிட்டுள்ளது.
 
சட்டவிரோத ஆட்கடத்தல்களுடன் தொடர்புடைய குற்றச் சாட்டின் பேரில் குறித்த மூன்று பேரையும் அவுஸ்திரேலிய அரசாங்கம் அண்மையில் இலங்கைக்கு நாடு கடத்தியிருந்தது.
 
புகலிடக் கோரிக்கையாளர்களின் நிலைமை தொடர்பில் அவுஸ்திரேலிய மற்றும் இலங்கை அரசாங்கங்கள் பொறுப்பு சொல்ல வேண்டுமென சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
 
நீர்கொழும்பு சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள குறித்த நபர்கள் சித்திரவதைக்கு உட்படுத்தப்படக் கூடாது எனவும் அவர்களின் பாதுகாப்பை இலங்கை அரசாங்கம் உறுதிப்படுத்த வேண்டும் எனவும் சர்வதேச மன்னிப்புச் சபையின் ஆசிய பிராந்திய பிரதிப் பணிப்பாளர் மது மல்ஹோத்ரா தெரிவித்துள்ளார்.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.