கிளிநொச்சியில் புதிய இராணுவத்தளம் திறப்பு

கிளிநொச்சியில் முன்னர் விடுதலைப்புலிகளால் அழிக்கப்பட்ட இராணுவத்தளம் இருந்த பகுதியில் புதிய இராணுவத்தளம் ஒன்று நேற்று திறக்கப்பட்டுள்ளதாக வன்னித் தகவல்கள் தெரிவித்துள்ளன.

இது தொடர்பில் அவை மேலும் தெரிவித்துள்ளதாவது:

வன்னியில் படைத்தளங்களை பலப்படுத்தும் நடவடிக்கைகளை சிறீலங்கா அரசு இரவு – பகலாக மேற்கொண்டு வருகின்றது. கிளிநொச்சியில் பழைய இராணுவ முகாம் அமைந்திருந்த பகுதியில் புதிய படைத் தளம் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. அதனை சிறீலங்கா இராணுவத்தளபதி லெப். ஜெனரல் ஜெகத் ஜெயசூரியா நேற்று திறந்துவைத்துள்ளார்.

இந்த முகாமுடன் இராணுவத்தினருக்கான நூல்நிலையமும், தமிழ் மக்களை விசாரணை செய்யும் மண்டபமும் அமைக்கப்பட்டுள்ளதாக அவை மேலும் தெரிவித்துள்ளன.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.