கிளிநொச்சி பிரதேசத்தில் விதவைப் பெண்களுக்கு தையல் இயந்திரங்கள் உதவி

போரினால் பாதிக்கப்பட்டு கணவன்மாரை இழந்த விதவைத் தாய்மாருக்கு கனடாவாழ் புலம்பெயர் தமிழர் ச.குகதாசனின் ஏற்பாட்டில் வாழ்வாதார மேம்பாட்டிற்கான உதவிகள் பெற்றுக் கொடுக்கப்பட்டுள்ளன.

இவற்றில் 10 தையல் இயந்திரங்கள் வழங்கப்பட்டன. இவை கணேசபுரம் மற்றும் மாயவனுர் ஆகிய கிராமங்களைச் சேர்ந்த விதவைப் பெண்களிற்கே வழங்கப்பட்டன.

இவற்றை தமிழரசுக் கட்சியின் செயலாளர் நாயகமும் பாராளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராசா மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் சிறிதரன் ஆகியேர் வழங்கி வைத்தனர்.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.