பாடகர் சாந்தனை விடுவித்தார் தயாமாஸ்ரர்!

தாயகத்தின் எழுச்சிப் பாடகரான எஸ்.ஜி.சாந்தன் நேற்று முன்னாள் இராணுவத்தினரால் விடுவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 2009 மே 18ஆம் திகதி இராணுவத்தினரால் ஓமந்தையில் கைது செய்யப்பட்ட சாந்தன் இராணுவத்தின் பல்வேறு முகாம்களில் விசாரணைகளுக உட்படுபடுத்தப்பட்டதன் பின்னர் போராளிகள் தடுத்துவைக்கப்பட்டிருந்த முகாம்களில் வாராந்தம் நடைபெற்ற நிகழ்வுகளில் பங்குகொண்டுவந்திருந்தார்.

இதேகாலப்பகுதியில் திருமதி மஹிந்தராஜபக்சவினால் போராளிகள் மத்தியில் இருந்து தேர்வு செய்யப்பட்ட கலைஞர்களில் சாந்தனும் இடம்பெற்றிருந்தார்.

குறித்த கலைஞர்களை விடுவிப்பதாக கடந்த சில மாதங்களாக முன்னாள் போராளிகள் மத்தியில் தெரிவிக்கப்பட்டிருந்த போதிலும் அவர்கள் எவரும் விடுவிக்கப்படவில்லை.

இந்நிலையில் நேற்று முன்னாள் தமிழீழ விடுதலைப்புலிகளின் அரசியல் துறை ஊடக இணைப்பாளராக செயற்பட்டு வந்த தயா மாஸ்ரர் சாந்தன் தடுத்துவைக்கப்பட்டிருந்த வவுனியா தடுப்பு முகாம் ஒன்றுக்குச் சென்று சாந்தனை விடுவித்து அழைத்துச் சென்றதாக அங்கிருந்து ஈழநேசன் செய்தித்தளத்திக்கு கிடைக்கப்பெற்ற தகவல்கள் தெரிவிக்கின்றன.

நல்லூர் கந்தன் தேர்த்திருவிழா நிகழ்வை ஒட்டி ஈபிடிபியின் ஊடகமான டான் ரீவியின் ஏற்பாட்டில் நடைபெறவுள்ள இசை நிகழ்ச்சியில் பங்குகொள்ளச் செய்வதற்காகவே சாந்தன் அவசரமாக விடுவிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

டான் ரீவியின் யாழ்.மாவட்ட பொறுப்பதிகாரியாக தயாமாஸ்ரர் செயற்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.