18வது அரசியல் திருத்தத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து சட்டத்தரணிகள் இன்று சவப்பெட்டி ஊர்வலம்

18வது அரசியல் திருத்தத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து சட்டத்தரணிகள் இன்று சவப்பெட்டி ஊர்வலம் மற்றும் ஆர்ப்பாட்மொன்றை நடத்தியுள்ளனர்.

தேசிய சட்டத்தரணிகள் சங்கத்தின் ஏற்பாட்டில் கொழும்பு உயர் நீதிமன்றத்திற்கு முன்னாள் இன்று நண்பகல் நடைபெற்ற ஆர்ப்பாட்ட மற்றும் ஊர்வலப் பேரணியில் தேசிய சட்டத்தரணிகள் சங்கத்தின் உறுப்பினர்கள் உட்பட பொதுமக்கள் பலரும் கலந்து கொண்டனர்.

“ஜனநாயகம் உயிரிழந்துவிட்டது”  என்ற தொனிப்பொருளில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் 18 வது அரசியல் திருத்தத்தினால் ஜனநாயகம் உயிரிழந்துவிட்டது  என்ற வாசகம் பொறிக்கப்பட்ட சவப்பெட்டியை தாங்கிய சட்டத்தரணிகள் ஊர்வலமாக சென்று தமது எதிர்ப்பை வெளியிட்டனர்.
 
18 வது திருத்தத்தை சமர்ப்பிக்கும் இன்றைய தினத்தை கறுப்பு தினமாக கருதி கறுப்புத்துணியால் தமது வாய்களை கட்டியே இவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தின் போது சட்டத்தரணிகள் சவப்பெட்டியை தோள்களில் சுமந்து சென்று உயர்நீதிமன்ற வீதிகளைச் சுற்றிவந்து பின்னர் உயர்நீதிமன்றத்திற்கருகில் இருக்கும் பூங்கவில் வைத்து சவப்பெட்டியை எரியூட்டினர்.

18 வது அரசியல் யாப்பு திருத்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து ஐக்கிய தேசியக் கட்சியினர் சபையிலும், சபைக்கு வெளியிலும் போராட்டம்.

அதேவேளை 18 வது திருத்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறு;பினர்கள் பாராளுமன்ற கட்டடித்திற்கு வெளியில் சத்தியாகிரக போராட்டத்தில் குதித்துள்ளனர்.

சபாநாயகர் சமல் ராஜபக்ஷவின் தலைமையில் நாடாளுமன்ற இன்று நாடாளுமன்றம் கூடியபோது ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பாராளுன்றத்திற்குள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட சபை அமர்வுகள் 10 நிமிட நேரம் ஒத்தி வைக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.