திருகோணமலையில் பாடசாலை மாணவன் குணரட்ணம் சர்மிளன் கடத்தப்பட்டுள்ளார்

திருகோணமலையில் பாடசாலை மாணவன் குணரட்ணம் சர்மிளன் என்ற இளைஞன் கடத்தப்பட்டுள்ளார்.
 
பாடசாலை மாணவனான இவர் கடந்த ஞாயிற்றுக்கிழமை கடத்தப்பட்டுள்ளதாகத் தெரியவருகிறது.

வெள்ளை வானில் வந்தவர்களாலேயே இவர்கள் கடத்திச் செல்லப்பட்டுள்ளதாக துறைமுக பொலிஸில் பெற்றோர்களால் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
 
குணரட்ணம் சர்மிளன் என்ற இந்த மாணவன் திருமலை கந்தசுவாமி கோவில் வீதியில் உள்ள தனியார் கல்வி நிலையதிற் கல்வி பயிலச் சென்றவேளை கடத்தப்பட்டதகத் தெரிவிக்கப்படுகிறது.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.