இலங்கை தமிழர் நிவாரண நிதிக்கு ரூ.2.12.கோடி வழங்கினார் ஜெயலலிதா

jeyaஇலங்கை தமிழர்களுக்காக அ.தி.மு.க. சார்பில் திரட்டப்பட்ட ரூ.2.12 கோடிக்கான காசோலையை செஞ்சிலுவை சங்கத்திடம் அ.தி்மு.க. பொதுச் செயலாளர் செல்வி ஜெயலலிதா வழங்கினார். இலங்கை தமிழர்கள் படுகொலை செய்யப்படுவதை கண்டித்தும், இலங்கையில் போரை நிறுத்த வலியுறுத்தியும் அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா கடந்த சில தினங்களுக்கு முன் உண்ணாவிரதம் இருந்தார். அப்போது உண்ணாவிரத மேடையில் இலங்கை தமிழர்களுக்கு நிவாரண நிதி திரட்டுவதற்காக உண்டியல் வைக்கப்பட்டிருந்தது.

அதில் ஜெயலலிதா தனது சொந்த நிதியில் இருந்து ரூ. 5 இலட்சமும், அதிமுக சார்பில் ஒரு கோடியும் வழங்கினார். அதேபோல் அன்று தமிழகம் முழுவதும் நடந்த அதிமுக உண்ணாவிரத்தில் உண்டியல் வைக்கப்பட்டிருந்தது.

இலங்கை தமிழர்களுக்காக திரட்டப்பட்ட ரூ.2.12 கோடிக்கான காசோலையை செஞ்சிலுவை சங்கத்திடம் ஜெயலலிதா வழங்கினார்.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.