புலிகளின் ஆயுதங்கள் மீட்பாம்,ஆயுதங்கள் விளையும் பூமியாக மாறிவரும் முல்லைத்தீவு!!!

தமிழீழ விடுதலைப் புலிகளிடத்திலிருந்து வன்னியை இலங்கை ராணுவத்தினர் கைப்பற்றிய நாள் தொட்டு இன்று வரை புலிகள் பதுக்கி வைத்திருந்ததாக என்று கூறு பல வகையான ஆயுதங்களை ராணுவத்தினர் கண்டுபிடித்து வருவதாக செய்திகள் வெளியிட்டு வருகின்றனர்.

முல்லைத்தீவு மாவட்டத்தின் வெள்ள முள்ளிவாய்க்கால் பகுதியில் தமிழீழ விடுதலைப் புலிகளால் மிகவும் பத்திரமான முறையில் புதைத்து வைக்கப்பட்டிருந்த C4 ஏxப்லொசிவெ களை கடற்படையின் புலனாய்வுப் பிரிவினர் கண்டு பிடித்துள்ளார்கள் என்று அரச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளனர்.

தமிழீழ விடுதலைப் புலிகள் இனிமேல் தலை நிமிர முடியாது என்று தம்பட்டம் அடித்து வரும் இலங்கை அரசு இவ்வாறான செய்திகளை வெளியிடுவது வேடிக்கையாக உள்ளது.

தமிழீழ விடுதலைப் புலிகளின் ஈழம் மீட்கும் போர் முள்ளிவாய்க்காலுடன் முடியவில்லை என்பதை இது போன்ற செய்திகள் நிறூபித்து வருகின்றமை தெளிவாகிறது.

இலங்கை படைகளால் மீட்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ள ஆயுதங்களின் விபரம் வருமாறு..

ஒட்டுமொத்த எடை 672 கிலோ. அத்துடன் கடல் புலிகளால் பயன்படுத்தப்பட்டு வந்த High Speed Inboard Boat Engine கள் நான்கையும் அப்பகுதியில் இருந்து கைப்பற்றி உள்ளார்கள். அத்துடன் கணிசமான எண்ணிக்கையிலான anti-aircraft ammunition களையும் கைப்பற்றி உள்ளார்கள்.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.