அன்னை தெரேசா கெளரவிப்பு நினைவுத் தபால் தலை அமெரிக்காவில் வெளியீடு

அன்னை தெரேசாவின் நினைவு தினத்தையொட்டி, அவரை கௌரவிக்கும் வகையில் அமெரிக்கா நேற்று தபால் தலை வெளியிட்டது. 44 சதம் மதிப்புள்ள இதில் 1979 ம் ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற அன்னை தெரேசாவின் படம் உள்ளது.

இந்த படத்தை கொலரடோ ஸ்பிரிங்ஸை சேர்ந்த விருது பெற்ற ஓவியர் இரண்டாம் தாமஸ் பிளாஷீர் வரைந்திருந்தார்.

நேற்று வாஷிங்கடனில் நடைபெற்ற இந்நிகழ்வுக்கு பிளாஷீரும் கலந்துகொண்டார்.

அன்னை தெரேசா 1997 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 5 ஆம் திகதி கொல்கத்தாவில் இறந்தார். அவர் இறப்பதற்கு ஒரு வருடத்திற்கு முன்னர் அவருக்கு அமெரிக்கா தனது நாட்டில் கௌரவ குடியுரிமை பட்டம் வழங்கியிருந்தது.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.