18ம் திருத்தச்சட்டத்திற்கு உயர் நீதிமன்றம் அனுமதி

அரசாங்கத்தால் சமர்பிக்கப்பட இருக்கும் 18ம் திருத்தச் சட்டத்திற்கு உயர்நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

இந்தத் தீர்ப்பின் விபரம் சபாநாயகருக்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்த நிலையில் இன்றைய தினம் நாடாளுமன்றத்தில் வைத்து அந்தத் தீர்ப்பு பகிரங்கப்படுத்தப்பட்டது.

இந்தச் சட்டத்திருத்தம் அரசியலமைப்பிற்கு முரணானது என எதிர்க்கட்சிகள் தெரிவித்து வந்த நிலையிலேயே இந்தத் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதனிடையே ஐக்கிய தேசியக் கட்சியின் மற்றுமொரு நாடாளுமன்ற உறுப்பினரும் அரசியலமைப்புச் சட்டத்திருத்தத்தை ஆதரிக்க உள்ளதாக தெரிய வருகிறது.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.