புலம்பெயர் தமிழர்களின் 14 மில்லியன் ரூபாய் நிதி மோசடி!

வவுனியா மாவட்டத்தின் செட்டிக் குளம் நலன்புரி முகாமில் அகதிகளாக அந்தரித்துக் கொண்டிருக்கும் உறவினர்களுக்கென புலம்பெயர் தமிழர்களால் அனுப்பி வைக்கப்பட்டிருந்த 14 மில்லியன் ரூபாய் நிதியை அப்பிரதேசத்தில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றின் முகாமையாளர் ஒருவர் கையாடிக் கொண்டு தலைமறைவாகி உள்ளார்.

பிரித்தானியா, கனடா, பிரான்ஸ், இத்தாலி ஆகிய நாடுகளில் உள்ள புலம்பெயர் தமிழர்கள் 60 பேர் வரையானோர் இப்பெருந்தொகைப் பணத்தை இம் முகாமையாளரூடாக நம்பிக்கையின் பேரில் அனுப்பி இருந்தனர்.

ஆனால் இப்பணம் அகதிகளைச் சென்றடையவே இல்லை என்பதுடன் முகாமையாளரையும் காணவில்லை. வவுனியா பொலிஸ் நிலையப் பொலிஸாருக்கு இம்மோசடி குறித்து எவரும் இன்னமும் எழுத்துமூலம் முறைப்பாடு செய்யவில்லை.

ஆயினும் அநாமதேய தொலைபேசி அழைப்பு ஒன்றின் மூலம் இம்மோசடி குறித்த தகவல்கள் பொலிஸாருக்கு கிடைத்துள்ளன. பொலிஸார் இம்முகாமையாளரைத் தேடி வலை விரித்துள்ளார்கள்.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.