கனேடிய அரசின் புதிய சட்டத்துக்கு கனேடிய தமிழர் பேரவை எதிர்ப்பு!
-
இவ் விடயம் 07. 09. 2010, (புதன்),
தமிழீழ நேரம் 21:59க்கு பதிவு செய்யப்பட்டது
- புலத்தமிழர் செய்திகள்
சர்வதேச கடல் பரப்பில் வைத்து அகதிகள் கப்பல்களை முற்றுகை இடுகின்றமைக்கு ஏற்ற வகையில் புதிய சட்டம் ஒன்றை கனேடிய அரசு நிறைவேற்றுவதற்கு கனேடிய தமிழர் பேரவை எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
கனேடிய அரசின் இந்நடவடிக்கை அகதிகளுக்கு அரசியல் தஞ்சம் கொடுத்து வருகின்ற மனிதாபிமான நாடுகளுக்கு பிழையான செய்தியை வழங்குவதாக இருக்கும் என்றும் கனேடிய தமிழர் பேரவையின் பேச்சாளர் டேவிட் பூபாலபிள்ளை தெரிவித்துள்ளார்.
இப்படி ஒரு சட்டத்தை நிறைவேற்றுவதை விட்டு விட்டு தமிழர்களை கௌரவமாக நடத்த வேண்டும் என்று இலங்கை அரசுக்கு கனடா அழுத்தங்களைக் கொடுக்க வேண்டும் என்று அவர் கேட்டுள்ளார்.