11வது நாளில் தொடரும் ஐரோப்பிய ஒன்றியத்தை நோக்கிய மனிதநேய நடை பயணம்

ஐரோப்பிய ஒன்றியத்தை நோக்கி தமிழ் மக்களிற்கு நீதி கேட்டு மனிதநேய நடை பயணம் மேற்கொண்டுள்ள திரு. ஜெகன் (62) அவுஸ்திரேலியா, திருமதி தேவகி குமார் (36) சுவிஸ், திரு. வினோத் (48) பிரான்ஸ் ஆகிய மூன்று ஈழ உணர்வாளர்கள் இன்று (07.09.2010) 11வது நாளில் தமது நடை பயணத்தைத் தொடர்ந்து வருகின்றனர்.

இன்று (07.09.2010 ) காலை 10:30 Bantzenheim எனும் பிரதேசத்தில் இருந்து ஆரம்பித்து Balgau ஊடாக 22 km நடந்து Neuf-Brisach எனும் இடத்தை இன்று மாலை சென்றடைந்தனர். மழை காரணமாக இவர்களால் இன்று அதிக துராம் நடப்பது கடினமாகிவிட்டது ஆகினும் பல கடினத்தின் மத்தியிலும் இவர்களின் மனிதநேய நடைபயணம் தொடர்கிறது. இதுவரை இவர்கள் 300 கும் (11 நாட்களில்) அதிகமான km நடந்துள்ளனர்.

இவர்களின் நடைபயணத்தை ஆதரித்து பல ஈழ உணர்வாளர்கள் இந்தியாவில் இருந்தும் வேற நாடுகளில் இருந்தும் வாழ்த்து செய்திகளை அனிப்பி உள்ளனர். இது இவர்களை இன்னும் உற்சாகத்துடன் நடப்பதற்கு மருந்து போல் உள்ளது.

நாளை strasbourg எனும் இடத்தில் உள்ள ஐரோப்பிய நாடாளுமன்றத்தில் இவர்களின் கோரிக்கைகள் கொண்ட மனு 14:00 மணியளவில் கையளிக்கப்படுகிறது அதன் பின் இவர்களின் நடைபயணம் முடிவடைந்த இடத்தில் இருந்து தொடரும்.

* இலங்கை அரசு மீது ஐ.நா. சுயாதீன போர்க்குற்ற விசாரணை மேற்கொள்ள வேண்டும். அதற்கு ஐரோப்பிய ஒன்றியம் அழுத்தம் கொடுக்க வேண்டும்.

* எமது பெண்கள் சிறுவர்கள் மீது அநீதியிழைத்த சீறீலங்கா அரசு மீது சர்வதேச நீதிமன்றத்தில் தண்டணை வழங்கப்படவேண்டும். அத்துடன் சிறைகளில் தவிக்கும் தமிழ் அரசியல் கைதிகள் விடுவிக்கப்படவேண்டும்.

* மனித உரிமைகள் மதிக்கப்படும் வரை சிறீலங்கா அரசை அனைத்து நாடுகளும் புறக்கணிக்க வேண்டும்.

* தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமை அங்கீகரிக்கப்பட வேண்டும்.

போன்ற கோரிக்கைகளை ஒட்டுமொத்த தமிழ்மக்களின் சார்பாகவும் முன்வைத்தே இம் மனிதநேய நடைபயணம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இந்த மூன்று ஈழ உணர்வாளர்களின் முயற்சிக்கு பக்கபலமாக வருவமாறு அணைத்து ஐரோப்பா வாழ் அனைத்து தமிழ் மக்களையும் ஆதரவு வழங்குமாறு உரிமையுடன் அழைக்கின்றோம்.

Copyright © 2004 - 2012 நெருடல். All rights reserved.