கிராமப்புறங்களில தமது உறுப்பினர்கள் மீது அடக்குமுறை பிரயோகிக்கப்படுகிறது – ஜே.வி.பி.

கிராமப் புறங்களில் தமது உறுப்பினர்களின் மீது அடக்குமுறை பிரயோகிக்கப்படுவதாக ஜே.வி.பி. கட்சி தெரிவித்துள்ளது.
 
ஹக்மன, மாத்தறை, அனுராதபுர மற்றும் பதுளை ஆகிய மாவட்டங்கள் உள்ளிட்ட பல பிரதேசங்களில் தமது கட்சி உறுப்பினர்கள் அடக்குமுறைக்கு உட்படுத்தப்படுவதாக கட்சியின் பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா சுட்டிக்காட்டியுள்ளார்.

18 ஆவது திருத்தச் சட்ட மூலத்திற்கு எதிராக நாடு தழுவிய ரீதியில் போராட்டங்கள் முன்னெடுக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
 
18 ஆவது திருத்தச் சட்ட மூலத்திற்கு எதிராக சுமார் 3000 உறுப்பினர்கள் எதிர்ப்பு போராட்டமொன்றை மேற்கொண்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
 
ராஜகிரியவிலிருந்து பாராளுமன்றம் வரையில் இந்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளது.

ஜே.வி.பி.யினால் நடத்தப்படவுள்ள பாரிய எதிர்ப்பு போராட்டங்களில் கலந்து கொள்ளும் வெளிமாவட்ட உறுப்பினர்கள் கொழும்பிற்கு பிரவேசிப்பதனை காவல்துறையினர் தடுத்து வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
 
போராட்டத்தில் கலந்து கொள்ளும் நோக்கில் சென்ற உறுப்பினர்கள் நீண்ட நேரம் காத்திருக்க நேரிட்டதாகக் குறிப்பிடப்படுகிறது.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.