ஜிமெயிலின் (google mail) புதிய அறிமுகம் – பூமராங் (boomerang)

நீங்கள் முக்கிய வேலை நிமித்தமாக நாளையோ அல்லது மறுநாளோ அல்லது வருகின்ற ஏதோ ஒரு குறிப்பிட்ட நாளோ பிசியாகி விடுவீர்கள், உங்களால் அந்த நாளில் இணையத்தில் பணிபுரிய இயலாது என வைத்துக் கொள்வோம். அந்த குறிப்பிட்ட நாளில் ஒரு நண்பருக்கு இமெயிலில் வாழ்த்து செய்தி ஒன்றை அனுப்ப வேண்டும், அல்லது அலுவலக நிமித்தமாக ஒரு முக்கிய மின்னஞ்சலை அந்த குறிப்பிட்ட நாளில் அனுப்ப வேண்டும்.

இதோ நீங்கள் அனுப்பும் அல்லது பெறும் மின்னஞ்சல்களை ஷெட்யூல் செய்ய வந்து விட்டது பூமராங் பீட்டா! பயர்பாக்ஸ் மற்றும் கூகிள் குரோம் பிரவுசர்களுக்கான நீட்சி! இது பீட்டா நிலையில் இருப்பதால் இன்வைட் கோட் மூலமாகவே இதனை தரவிறக்க முடியும். இந்த தளத்தில் இன்வைட் கோட் கேட்கும் பொழுது ஹெச்டிஜி (இதுபோல் ஏதாவது)என்ற கோட் ஐ கொடுத்து தரவிறக்கி கொள்ளுங்கள். இது குரோம் மற்றும் பயர்பாக்ஸ் பிரவுசர்களுக்காக தனித்தனியாக தரப்பட்டுள்ளதால், உங்களிடமுள்ள பிரவுசருக்கு ஏற்றவாறு தேர்வு செய்து கொள்ளுங்கள்.

இந்த நீட்சியை பதிந்து கொண்ட பிறகு ஒரு முறை பிரவுசரை மூடி பின் திறக்கவேண்டும். இனி உங்கள் ஜிமெயில் கணக்கில் நுழைந்து புதிய மின்னஞ்சலை உருவாக்கும் பொழுது, மேலே புதிதாக ஒரு பட்டன் வசதி சென்ட் லேட்டர் (பூமராங்) வந்திருப்பதை கவனிக்கலாம். இதிலுள்ள வசதிகளை பயன்படுத்தி, உருவாக்கும் மின்னஞ்சலை ஒரு குறிப்பிட்ட நேரத்தில் அனுப்ப முடியும். அதுவரை அந்த மின்னஞ்சல் உங்கள் ஜிமெயில் சர்வரில் இருக்கும். அதே போல ரிசீவ் செய்வதற்கும் (மீண்டும் இன்பாக்ஸில் வரும்) ஒரு குறிப்பிட்ட மின்னஞ்சலை திறக்கும் பொழுது வலது மேல் புறம் வரும் பூமராங் பட்டனை க்ளிக் செய்து கொள்ளலாம்.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.