‘மக்கள் பாதுகாப்பு வலயம்’ மீது நேற்றும் நேற்று முன்நாளும் எறிகணைத் தாக்குதல்: 73 தமிழர்கள் படுகொலை; 127 போ் காயம்

vanni_body1வன்னிப்பெரு நிலப்பரப்பில்  ‘மக்கள் பாதுகாப்பு வலய’ பகுதிகள் மீது நேற்று சிறிலங்கா படையினர் நடத்திய எறிகணைத் தாக்குதல்களில் 73 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன் 127 பேர் காயமடைந்துள்ளனர்.

‘மக்கள் பாதுகாப்பு வலய’ பகுதிகளான மாத்தளன், அம்பலவன்பொக்கணை, வலைஞர்மடம் ஆகிய பகுதிகள் மீது நேற்று ஞாயிற்றுக்கிழமை சிறிலங்கா படையினர் ஆட்லெறி எறிகணை, பல்குழல் வெடிகணை, மோட்டார் மற்றும் பீரங்கித் தாக்குதல்களை நடத்தினர்.

இதில் 62 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன் 127 பேர் காயமடைந்துள்ளனர்.

சீ.றஞ்சன் (வயது 36)

பே.நல்லசாமி (வயது 65)

ம.தெய்வேந்திரராசா (வயது 42)

ஜெ.ஜோதிகா (வயது 07)

உ.யோகேஸ்வரன் (வயது 10)

ச.மகாலிங்கம் (வயது 45)

ச.அமிர்தலிங்கம் (வயது 61)

வ.லக்சுமணன் (வயது 60)

வி.யோகநாதன் (வயது 40)

உடன்பிறப்புக்களான

கு.தமிழினி (வயது 22)

கு.தவேந்தினி (வயது 14)

கு.தமிழ்குமரன் (வயது 11)

த.சிறிதரன் (வயது 23)

ச.மேரி (வயது 73)

ச.யேசு (வயது 36)

வ.லோகநாதன் (வயது 30)

மோ.தேவி (வயது 39)

மோ.தரனி (வயது 12)

ச.மகாலிங்கம் (வயது 48)

ம.மைதிலி (வயது 07)

மோ.தேவி (வயது 38)

மோ.சாருலதா  (05 மாதக் குழந்தை)

சி.கேசவன் (வயது 06)

ம.சூசைதாசன் (வயது 62)

ஆகியோர் படுகாயமடைந்த  நிலையில் மருத்துவமனைக்கு கொண்டுவரப்பட்ட போது உயிரிழந்துள்ளனர். இவர்களில் நால்வரின் உடலங்கள் அடையாளம் காணப்படவில்லை. ஏனையோரின் பெயர் விபரம் கிடைக்கப்பெறவில்லை.

இவர்களில் அதிகமானவர்கள் மாத்தளன் பகுதியில் கொல்லப்பட்டுள்ளனர்.

காயமடைந்த 127 பேரில் 20 பேர் மாத்தளன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதேவேளையில் மக்கள் பாதுகாப்பு வலய பகுதியான மாத்தளன் பகுதியில் நேற்று முன்நாள் சிறிலங்கா படையினர் எறிகணைத் தாக்குதல்களை நடத்தியுள்ளனர்.

இதில் 11 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன் பெருமளவிலானோர் காயமடைந்துள்ளனர்.

அ.தங்கேஸ்வரன் (வயது 39)

க.சிறீதரன் (வயது 49)

கு.தர்மேந்தினி (வயது 14)

செ.மனோகரன்(வயது 56)

தமிழ்க்குமரன்(வயது 15)

இளங்கோ (வயது 35)

சி.புண்ணியசிங்கம் (வயது 58)

வீ.சுந்தரலிங்கம்  (வயது 52)

ஆகியோர் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் கொல்லப்பட்ட மூவரின் உடலங்கள் அடையாளம் காணப்படவில்லை.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.