1000 பேரைத் தடுத்து வைக்கக்கூடியவாறு யாழில் புதிய சிறைச்சாலை

1000 பேரைத் தடுத்து வைத்திருக்கக்கூடிய விதமாக யாழ்ப்பாணத்தில் புதிய சிறைச்சாலைக் கட்டடத்தைக் கட்டுவதற்கு பாராளுமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. இதற்குரிய விண்ணப்பத்தை சிறைச்சாலைகள் புனர்வாழ்வு அமைச்சர் டி.ஈ.டபிள்யூ குணசேகரா தாக்கல் செய்தார். இச்சிறைச்சாலையைக் கட்டுவதற்கு 272 மில்லியன் ரூபா செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது. சிறைச்சாலைகள் திணைக்களத்துக்குச் சொந்தமாக பண்ணைப் பகுதியிலுள்ள 2.5 ஏக்கர் காணியில் இச்சிறைச்சாலை அமைக்கப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்படுபவர்களின் புனர்வாழ்வுக்கு வேண்டிய அம்சங்களை உள்ளடக்கியதாக இச்சிறைச்சாலை அமைக்கப்படவுள்ளதாம். தற்போது யாழிலுள்ள சிறைச்சாலை நான்கு வாடகை வீடுகளிலேயே இயங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.