யாழ்.குடாநாட்டில் கடத்தல் தொடர்கிறது! முதியவர் ஒருவர் கடத்தப்பட்டு, தாக்கப்பட்டார்!

யாழ். சாவகச்சேரியைச் சேர்ந்த முதியவர் ஒருவர் அடையாளம் தெரியாதோரால் கடத்தப்பட்டு கடுமையாகத் தாக்கப்பட்டு படுகாயம் அடைந்துள்ளார்.

இது குறித்து மேலும் தெரியவருவதாது,

சாவகச்சேரிப் பகுதியில் வாகனத் திருத்தகம் ஒன்றின் உரிமையாளரான 60வயதுடைய சின்னத்தம்பி ஜெயசிங்கம் என்பவர் நேற்று இரவு அடையாளம் தெரியாதோரால் கடத்திச் செல்லப்பட்டுள்ளார்.

கடத்திச் செல்லப்பட்ட அவர் அடையாளம் தெரியாதோரால் கடுமையாகத் தாக்கப்பட்ட நிலையில் அவர் உயிரிழந்ததாக கருதிய கடத்தல்காரர்கள் அவரை மட்டுவில் பற்றைக்காட்டுப் பகுதியில் கைவிட்டுச் சென்றுள்ளனர்.

இந்நிலையில் அவர் அங்கிருந்து மீட்கப்பட்டு யாழ்.போதனா வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக யாழ்ப்பாணத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.