மஹிந்த குடும்பத்தினைச் சித்திரித்த போஸ்டர்கள் தயாரிப்பில் மங்கள என்கிறது பொலிஸ்!

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு அவதூறு ஏற்படுத்தும் வகையில் அச்சிடப்பட்ட போஸ்டர்கள் ஜே.வி.பி.க்கு சொந்தமான அச்சகமொன்றில் அச்சிடப்பட்ட தாகவும் இதன் பின்னணியில் ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் மங்கள சமரவீர இருப்பதாகவும் பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது என அரச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இது குறித்து மேலும் தெரியவருவதாவது,

தெல்கந்தையில் உள்ள மேற்படி அச்சகத்துக்கு மங்கள சமரவீரவும், ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவின் தனிப்பட்ட செயலாளர் சுதத் சந்திரசேகரவும் மேற்கூறிய அவதூறு போஸ்டர்களை அச்சடிக்க 55 ஆயிரம் ரூபாவை முற்பணமாக கொடுத்திருப்ப தாகவும் அந்த விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.

இத்துடன், கடந்த புதன்கிழமை (08) ஐக்கிய தேசியக் கட்சியின் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தின் போது பயன்படுத்தப்பட்ட அவதூறு போஸ்டர்கள் மற்றும் கொடும்பாவிகள் ஆகியவை மங்கள சமரவீரவின் கண்காணிப்பின் கீழேயே உருவாக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

மேற்கூறிய அவதூறு போஸ்டர்கள் நாடளாவிய ரீதியில் விநியோகிக் கப்பட்டுள்ளதாகவும் அவற்றை தேடுமாறு பொலிஸாருக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாகவும் குறித்த ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

குறித்த போஸ்டரில் மஹிந்தராஜபக்ச கிட்லரின் முக அமைப்புடன் காணப்படுவதுடன் அவருக்குப் பின்பாக அவர்களது குடும்ப ஆட்சியார்களின் முகங்களும் கைகளும் ஒவ்வொரு அடையாங்களாககச் சித்தரிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.